விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்று 
செய்திகள்

பிலிப்பைன்ஸ்: படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை கடற்புயல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் பெருமழையும் பெய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடல் மார்க்கமாக படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.