கோப்புப்படம் 
செய்திகள்

மேல்மலையனூர் கோவிலுக்கு 300 அரசு சிறப்பு பஸ்கள்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று வழிபடுவது உண்டு. வருகிற 26-ந் தேதி அமாவாசை வருவதையொட்டி சென்னையில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக டிவிசனல் மானேஜர் ரகுராமன் கூறியதாவது:-

மேல்மலையனூர் கோவிலுக்கு வருகிற 25-ந்தேதி இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 26-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக விடப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை இயக்கப்படுகிறது. 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.