சாலை விபத்து 
செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பக்தர்கள் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர்.

முசாபர்நகர்:

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் இருந்து ராஜஸ்தானின் பாகர் பகுதிக்கு சுமார் 50 பக்தர்களுடன் நேற்று ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து முசாபர்நகர் மாவட்டம் பின்னா பைபாஸ் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 30 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT