செய்திகள்

இராமநாதபுரம் அருகே அதிகாலையில் 3 வாகனங்கள் மோதல் - 2 பேர் பலி, 21 பேர் காயம்

இராமநாதபுரம் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #RoadAccident

இராமநாதபுரம்:

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே மாநில நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கின. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காயமடைந்தவர்களுக்கு அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர்செய்த பின்னர் சாலையின் ஒருபகுதி வழியாக மட்டும் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #RoadAccident #VehicleCollide