ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பான் மாவட்டத்துக்குட்பட்ட பட்டோட்டே பகுதியில் உள்ள முக்கிய சந்தை பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையேறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்ததையடுத்து பயங்கரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பிச்செல்ல்ல முயன்று அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகள் நுழைந்த வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அதில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். ஆனால் வீட்டின் உரிமையாளர் விஜய்குமாரை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணை கைதி விடுவிக்கப்பட்டார். இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்ததாக ஜம்மு காவல்துறை ஐ.ஜி முகேஷ் சிங் தெரிவித்தார்.