மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியை சேர்ந்த ரசூல்பாக் என்ற இடத்தில் இன்று இரவு மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #building collapse