செய்திகள்

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் கைது

மணிப்பூர் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் சட்டவிரோதமாக நுழைந்த  மூன்று ரோஹிங்கியா அகதிகளை பாதுகாப்புபடையினர் நேற்று இரவு கைது செய்தனர். இவர்கள் தெங்குனாபால் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள மோரி நகரில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்துள்ளனர். அவர்கள் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும் மியான்மரின் பாகுனா மற்றும் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எளிதாக இந்தோ-மியான்மர் எல்லைப்பகுதி வழியாக நுழைந்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மீது நடைபெற்று வரும் ராணுவ அடக்கு முறை காரணமாக ஏராளமாக மக்கள் அகதிகளாக வங்காளத்தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், சில வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். அதே போன்று ரோஹிங்கியா மக்கள் இந்தியாவிற்குள் நுழைகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT