செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் - பாகிஸ்தான் வீரர்கள் மூவர் பலி

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான வசிரிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். #Pakistansoldiers

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வசிரிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பதுங்கி இருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வபோது எதிர்பாராத விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள அல்வாரா என்ற இடத்தில் இன்று சுமார் 70 தலிபான் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

சில பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Pakistansoldiers #Pakistansoldierskilled #terrorattack #Afghanborder