செய்திகள்

சத்தீஸ்கர்: 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர் - துப்பாக்கிகள் பறிமுதல்

சத்தீஸ்கரில் நக்சலைட்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவுன் மாவட்டத்தில் உள்ள மன்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அம்மாவட்ட போலீசாரும், இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினரும் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதற்கு போலீசாரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஏ.கே., இன்சாஸ் மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.