பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அம்மாபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 29). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த கவிதா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கவிதா உடல் நலக்கோளாறு காரணமாக சில மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இதற்கிடையே கவிதா கர்ப்பம் தரித்தார்.
தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த இவர், அடிக்கடி தான் மாத்திரை சாப்பிட்டதால் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமா, என்று பலரிடம் கேட்டு இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து அவர் பயத்திலும் இருந்து வந்தார்.
நேற்று லோகநாதன் வேலைக்கு சென்று விட்டார். அப்போது தனியாக இருந்த கவிதா தற்கொலை செய்ய முடிவு செய்து தூக்குப்போட்டு கொண்டார். மாலையில் வீடு திரும்பிய லோகநாதன் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது கவிதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கவிதாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் திருப்பூர் உதவி கலெக்டரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews