டெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து 
செய்திகள்

டெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து - 3 பேர் உயிரிழப்பு

டெல்லி ஷாடாரா பகுதிக்குட்பட்ட ஜில்மில் தொழிற்பேட்டையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் இன்று நடந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

யமுனை நதிக்கரையில் முன்னர் பழைய டெல்லி என்றழைக்கப்பட்ட  ஷாடாரா பகுதிக்குட்பட்ட ஜில்மில் தொழிற்பேட்டையில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

வழக்கம்போல் இந்த தொழிற்சாலையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தபோது கிடங்கு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. தகவல் அறிந்து 26 வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து சேர்ந்தனர்.

தொழிற்சாலையின் பல பகுதிகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.