ஜம்மு:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பின்னிரவில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அடுத்தடுத்து துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல்வரை நீடித்துவரும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்பு மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதே பகுதியில் நேற்று பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த 45 வயது பெண் பலியானது நினைவிருக்கலாம். #tamilnews