சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 2வது ரிக் இயந்திரம் 
செய்திகள்

சிறுவன் சுர்ஜித்தை மீட்க 2-வது ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடக்கம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 2வது ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது.

மாலை மலர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 53 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கியது.

ஊழியர்களின் கடின முயற்சியில் 2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவி பொறுத்தும் பணி நிறைவடைந்த நிலையில் 35 அடி ஆழத்தில் இருந்து குழி தோண்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  35 அடி ஆழத்திற்கு கீழே மண் மட்டும் இருந்தால் இரவுக்குள் பணி முடிய வாய்ப்பு இருப்பதாகவும்,  35 அடி ஆழத்திற்கு கீழே பாறை இருந்தால் காலையிலும் பணி தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த முயற்சியின் மூலம் சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கபடுவான் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.