கொல்கத்தா:
தமிழகம், புதுச்சேரியுடன் கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இரு மாநிலங்களிலும் முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி முடிந்து விட்டது. அசாமில் 47 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த மாநிலங்களில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த 69 தொகுதிகளிலும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை பிரசாரம் ஓய்கிறது. 31-ந்தேதி பூத் சிலிப்புகள் வீடு வீடாக கொடுக்கப்படும். 1-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கு கிறது.
இரு மாநிலங்களிலும் 3-வது கட்ட தேர்தல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் அசாமில் தேர்தல் முடிந்து விடும். மேற்கு வங்காளத்தில் மட்டும் மேலும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெறும்.