புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகள் மிசாபாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் 23-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.
இந்த நிலையில் 2-வது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது. இந்த 2 குற்றப்பத்திரிகைகள் குறித்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கோர்ட்டு முடிவு செய்கிறது. #TamilNews