கோப்புபடம் 
செய்திகள்

ராமநாதபுரம் அருகே மது விற்ற 26 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்திஜெயந்தி நாளையொட்டி மது விற்பனை செய்து 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்திஜெயந்தி நாளையொட்டி மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த பெண் உள்பட 26 பேரை போலீசார் கைதுசெய்தனர். 

இவர்களிடம் இருந்து 337 மதுபாட்டில்களும், ரூ.2 ஆயிரத்து 420 மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, பரமக்குடி திருவரங்கம் ரோடு பகுதியில் உள்ள கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 50 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT