உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலையில் கடந்த 11-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சென்னை, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக காட்டுத்தீக்கு பலியானார்கள்.
மேலும் பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களாக குரங்கணி வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஓரிரு நாள் முன்னதாக பெய்திருந்தால் உயிர்பலி நிகழ்ந்திருக்காது என பொதுமக்கள் கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
குரங்கணி வனப்பகுதியில் 3 குமிழ் மலை முழுவதும் வளர்ந்து நின்ற புற்கள் எரிந்து சுமார் 2500 ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயால் நாசமாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த பகுதி மரங்கள் இல்லாத புல்மேடு என்பதால் பறவை, விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த கொழுக்குமலை பகுதியில் பாம்பு, தவளை உள்ளிட்ட சிறு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் அந்த இனமும் அழியும் அபாயம் உள்ளது. தீ தடுப்பு கோடு அமைக்காததே இந்த பேரிடருக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை காரணம் காட்டுகின்றனர். மேலும் வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. தீ விபத்து நடந்த கொழுக்குமலை, குமிழ்குன்று போன்ற இடங்கள் போதை புற்களால் நிறைந்தவை. இந்த புல் சுமார் 2மீ வரை வளரும். எண்ணை பசை அதிகமாகிவிட்டால் காய்ந்து காட்டுத்தீ பற்றுகிறது. சுமார் 20 கி.மீ வேகத்தில் காட்டுத்தீ பரவும். ஆனால் சம்பவம் நடந்த அன்று காட்டுத்தீயின் வேகம் வழக்கத்தை விட அதிமாக இருந்துள்ளது. உயிரிழப்பிற்கு இதுவும் ஒரு காரணமாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக புற்களை சிலர் எரித்து விடுகின்றனர். இதுபோன்ற செயல்களால்தான் காட்டுத்தீ பரவுகிறது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளும் சிகரெட் குடித்துவிட்டு வனப்பகுதியில் அணைக்காமல் போட்டு விடுவதால் தீ பரவுகிறது.
இதை கண்காணிக்க வனத்து றையினர் ரோந்து செல்வார்கள். தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரண மாக ரோந்து செல்வ தில்லை. இனிவரும் காலங் களில் விழிப்புணர் வோடு செயல்படவேண்டும் என வனஆர்வலர்கள் தெரிவித்தனர்.