லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் அலகாபாத் மாவட்டத்தில் 14 புதிய மின் திட்டங்களுக்கான பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய யோகி ஆதித்யாநாத், அடுத்த ஆண்டுக்குள் உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மின்சார சேவை குறைபாடு தொடர்பாக புகார் அளிப்பதற்கான புதிய ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 24 மணிநேரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதால் மாநிலத்தில் மின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது சுட்டிக்காட்டிய அவர், எனது தலைமையிலான இந்த அரசு ஊழலுக்கு ஒருபோதும் இடமளிக்காது என்றும் குறிப்பிட்டார்.