மதுரை விமான நிலையம் 
செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் 23 துப்பாக்கிகள் பறிமுதல்

துபாயில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரைக்கு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 3 பேர் கொண்டு வந்த லக்கேஜ்களை சோதனையிட்டபோது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் பயன்படுத்தப்படும் 23 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அவர்களிடம் துப்பாக்கி கொண்டு வருவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, துப்பாக்கி சுடும் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,  இந்திய துப்பாக்கி சுடும் கழகங்களில் துப்பாக்கிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து 23 துப்பாக்கிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.17.01 லட்சம்  என தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT