செய்திகள்

4900 கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல்

பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜ்னா திட்டத்தின் கீழ் 4900 கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல் அளித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் வங்கியில் நீண்ட வரிசையில் நின்று செல்லாத நோட்டுகளை மாற்றினார்கள். டிசம்பர் மாதத்திற்கு பின்பும் ஏராளமான நோட்டுகள் வங்கி கிளைகளுக்கு வராமல் இருந்தது.

இதனால் மத்திய அரசு ‘பிரதான் மந்திர கரிப் கல்யாண் யோஜ்னா’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வங்கியில் செலுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதற்குப் பதிலாக வருமான வரி மற்றும் அபராதம் ஆகியவற்றிற்காக 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். 25 சதவீதம் வட்டியில்லாத டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்தது.

SCROLL FOR NEXT