செய்திகள்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - காசியப் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரான்சில் நடைபெற்று வரும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பாருபள்ளி காசியப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #OrleansMastersSuper100 #ParupalliKashyap

மாலை மலர்

பாரிஸ்:

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் நேற்று (27-ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பாருபள்ளி காசியப், குரோசியாவின் ஸ்வொனிமிர் டுர்கின்ஜக் உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய காஷ்யப் முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காஷ்யப் இரண்டாவது செட்டையும் 21-7 என எளிதாக கைப்பற்றினார்.

இதன்மூலம் 21-16, 21-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற காஷ்யப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் நாளை நடைபெற உள்ள மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அயர்லாந்தின் ஜோஷுவா மேகீயை எதிர்கொள்ள இருக்கிறார்.

மற்றொரு இந்திய வீரரான குருசாய்தத் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #OrleansMastersSuper100 #ParupalliKashyap