எச்எம்டி குளோபல் நோக்கியா பிராண்டு ரீஎண்ட்ரியின் முதல் ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், 2018-ம் ஆண்டின் முதல் வெளியீடு சார்ந்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான TENAA-இல் TA-1054 என்ற மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2018) என்றே கூறப்படுகிறது. முந்தைய முதல் தலைமுறை நோக்கியா 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனும் முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 7 போன்றே காட்சியளிக்கலாம் என்றும் புதிய 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பசடுகிறது. அந்த வகையில் இதன் கேபாசிட்டிவ் பட்டன்கள் ஆன்-ஸ்கிரீன் பட்டன்களாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் கேமரா அமைப்பு மற்றும் போத்தி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 மற்றும் மற்றும் நோக்கியா 8 (2018) சீனாவில் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.