கோப்புப்படம் 
செய்திகள்

திருப்பதியில் செம்மரம் வெட்ட சென்றதாக 20 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா போலீஸ்

ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 20 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமராவதி:

ஆந்திர பிரதேசம் திருப்பதி திருமலையில் இன்று அதிகாலை 20 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட தமிழர்கள் காவல் நிலையம் அழைத்து சென்ற ஆந்திர போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT