அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.
இந்த நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன.
இதில் படுகாயம் அடைந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர். இதில் 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தடுப்பூசி போட்டு விட்டு வீட்டிற்கு சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெரு பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு செல்கிறது.
தற்போது நாய்கள் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.