கோப்பு படம் 
செய்திகள்

பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி - 2 வாலிபர்கள் கைது

வேதாரண்யம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா மகாராஜபுரம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அஜிதா (வயது 40). இவர் குரவப்புலத்தில் உள்ள ராமலிங்கம் என்பவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். ராமலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆதிமாதவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததால் அஜிதாவை அவர் வீட்டிற்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அஜிதா சம்பவத்தன்று ராமலிங்கம் வீட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு தென்னம்புலம் கலைஞர் சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது குரவப்புலத்தைச் சேர்ந்த ஆதிமாதவன் (33), குமார் (34) ஆகிய இருவரும் அஜிதாவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து அஜிதா கரியாப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன், குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT