செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபோர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #terroristskilled #Soporeencounter

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபோர் மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. #terroristskilled #Soporeencounter