கோப்புபடம் 
செய்திகள்

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல் தாய்-மகன் பலி

சத்தியமங்கலம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

மாலை மலர்

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்துக்காட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (55) இவரது மகன் சாமி நாதன் (27). கட்டிட தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம்- கோபி ரோட்டில் எருமைபடை பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியது.

இதில் சின்னம்மாள், சாமிநாதன் ஆகியோர் பலியானார்கள்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.