திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அருகே தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானது திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.