ஸ்ரீநகர்:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், எல்லையில் ஊடுருவல் செய்து இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இதனால் இந்திய எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் நேற்றிரவு திடீரென ஊடுருவ முயன்றனர். அவர்கள் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர், பாக். படையினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தகவலை எல்லைப் பாதுகாப்பு படையினர் உறுதிசெய்தனர்.