நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கணபதி (87) நெசவுத் தொழிலாளி. முன்னாள் ராசிபுரம் வட்ட துணைச் செயலாளர், முன்னாள் வெண்ணந்தூர் ஒன்றிய அவைத்தலைவர், அலவாய்பட்டி கிளை முன்னாள் செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக கழக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை தொலைகாட்சியில் பார்த்து, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் அடக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் கருணாநிதி மரணம் குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதே போல் ராசிபுரம் ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் பெருமாயி அம்மாள் (53) விவசாயி தொழிலாளியான இவர் கருணாநிதி உடலைப் பார்த்துக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது கணவர் பெயர் பெரியசாமி. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
கருணாநிதியின் மறைவை அறிந்து அதிர்ச்சியில் மரணமடைந்து அவர்கள் பிரிவால் வாடும் திமுக தொண்டர்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் ஆறுதல் கூறினர். #karunanidhideath #dmk