செய்திகள்

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா வீட்டை நோட்டமிட்ட 2 பேர் கைது

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள அலோக் வர்மா இல்லம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #AlokVerma #CBIDirector

லஞ்ச புகார் தொடர்பான மோதல் முற்றிய நிலையில், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக நீக்கப்பட்டனர். அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.  அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, அவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.