ஐ.சி.சி. உலக கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷூசாத் கோபத்தில் பேட்டை தூக்கி பிட்சில் ஏறிந்தார். இதையொட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து பயன்படுத்தியதால் 1 ஆண்டு தடை பெற்ற அவர் 3 மாதங்களுக்கு முன்பு களத்துக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.