லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள பன்னா தேவி பகுதியில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்த பயங்கர விபத்தின் தாக்கத்தினால் சுமார் 40 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.