செய்திகள்

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள சர்ச்சில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் அமைந்துள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மாலை மலர்

கராச்சி:

பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் அமைந்துள்ள சர்ச் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பிரார்த்தனை முடிந்து பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் வெளியே வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பரில், குவெட்டா நகரில் உள்ள மற்றொரு சர்ர்சில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews