கைது 
செய்திகள்

வடசேரியில் 2 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

வடசேரி பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

வடசேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் அதிக அளவு நடமாடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது. 

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை வடசேரி பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் ஒரு வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT