கோவை:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலை ஏறும் பயிற்சிக்கு சென்ற 39 பேர் காட்டுத் தீயில் சிக்கி கொண்டனர். அவர்களில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது.
காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வனத்துறையினர், கிராம பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று 2 ராணுவ ஹெலிகாப்டர் சென்றது.
இன்று மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்று உள்ளது. அதில் 20 கமோண்டா வீரர்களும் சென்று உள்ளனர் அவர்கள் மருத்துவ உபகரணங்கள் எடுத்து சென்றுள்ளனர். ஒவ்வொரு ஹெலிகாப்டரும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீர் நிரம்பும் வசதி கொண்டது.
20 கமாண்டோ வீரர்களும் குரங்கணி பகுதிக்கு சென்று காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.