செய்திகள்

மியான்மரில் நீர்வீழ்ச்சியில் விழுந்து 2 இளம்பெண்கள் பலி

மியான்மர் நீர் வீழ்ச்சியின் உச்சியில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்த 2 இளம்பெண்கள் கீழே தவறி விழுந்து பலியானார்கள். #Myanmar #Waterfalls

மாலை மலர்

யங்கோன்:

மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் கியான் மாகாணத்தின் காவ்கரியேக் நகரில் டாவ் நாவ் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண்கள் 10 பேர் சுற்றுலா வந்தனர். 19 வயதான 2 பெண்கள் நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். அவர்களில் ஒரு பெண் நீர் வீழ்ச்சியின் உச்சியில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறியது. உடனே அவரது தோழி அவரின் கையை பிடித்துக்கொண்டு காப்பற்ற முயன்றார்.

ஆனால் இருவரும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து 60 மீட்டர் ஆழத்தில் தரையில் விழுந்தனர். இதில் பாறைகளில் மோதியதில் இருவருக்கும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.  #Myanmar #Waterfalls