செய்திகள்

டெல்லியில் இருவரை சுட்டுக் கொன்று பட்டப்பகலில் ரூ.25 லட்சம் வழிப்பறி

நாட்டின் தலைநகரான டெல்லியில் இன்று பட்டப்பகலில் முகமூடி கொள்ளையர்கள் இருவரை சுட்டுக் கொன்று 25 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:

புதுடெல்லியை சேர்ந்த நான்கு பேர் வங்கியில் செலுத்துவதற்காக இன்று காலை 25 லட்சம் ரூபாயை கொண்டு சென்றனர். நரேலா அருகில் உள்ள பழைய அனாஜ் மண்டி வழியாக வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு முகமூடி நபர்கள் பணத்துடன் சென்றவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதில் காயடைந்த மூன்று பேரில் இருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒருவர் இடது கையில் குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நரேலா பகுதி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT