செய்திகள்

விவசாயிடம் ரூ.40 ஆயிரம் திருடிய 2 பேர் கைது

பர்கூர் அருகே விவசாயிடம் ரூ.40 ஆயிரம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 63) விவசாயி. இவர் மாடு வாங்குவதற்காக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே ரூ.40 ஆயிரம் எடுத்து தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர் பணம் எடுத்துக் கொண்டு செல்வதை அறிந்த 2 பேர் அவரிடம் சென்று நாங்கள் உங்களுக்கு மாடு வாங்கி தருகிறோம் என்று பேச்சு கொடுத்தனர். அப்போது வண்டியில் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். 

மீண்டும் அவர் வண்டியை எடுக்க முயன்றபோது வண்டியில் இருந்த பணத்தை காணமால் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குபதிவு செய்து ராமசாமி கூறிய அடையாளத்தை வைத்து தேன்கனிக்கோட்டையை சேர்ந்த லகுமய்யா, நாராயணப்பா ஆகிய 2 பேரும் அவரிடம் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம்  இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT