நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. எனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தரும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 2 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்துக்கு இன்னும் 2 ஆம்புலன்சுகள் கூடுதலாக வரவுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சிறப்பான சேவை செய்ய இயலும்“ என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையதலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜ், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்திராஜகுமாரி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் கிளாரன்ஸ் டேவி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில்குமார், குமாரப்பாண்டியன், சங்கரன் நாராயணன் அரசு வக்கீல் சுந்தரம், குமரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஷாஜகான், நிர்வாகிகள் ஆனந்தன், ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபின் கிங்ஸ்டன்ராஜ், தொழில் அதிபர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்