பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். தொடக்க வீராங்கனை மந்தனா சிறப்பாக விளையாடி 86 ரன்கள் குவித்தார். மந்தனா களத்தில் நிற்கும் வரை இந்திய அணிதான் வெற்றிபெறும் என்ற உறுதியான நிலை இருந்தது.
மந்தனா 38-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 171 ரன்னாக இருந்தது. 73 பந்தில் 37 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுக்கள் இருந்தது. ஆனால் கடைநிலை வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா 47 ஓவரில் 9 விக்கெட் இழபிற்கு 190 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.