சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தண்டிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiots #SajjanKumar