பிளாஸ்மா தானம் 
செய்திகள்

சென்னை அரசு மருத்துவமனையில் 194 பேர் பிளாஸ்மா தானம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 194 பேர் இதுவரை பிளாஸ்மா தானம் அளித்திருப்பதாகவும், அதன் மூலம் 400-க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் இல்லை. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனை தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.50 கோடி செலவில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 7 பேர் வரை பிளாஸ்மா தானம் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த டாக்டர்கள், செவிலியர்கள், முன்கள வீரர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட 194 பேர் இதுவரை பிளாஸ்மா தானம் அளித்திருப்பதாகவும், அதன் மூலம் 400-க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மா அணுக்களை சராசரியாக 2 பேருக்கு வழங்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.