செய்திகள்

தலைமை ஆசிரியையிடம் 19 பவுன் நகை திருட்டு

அரசு பஸ்சில் வந்த போது தலைமை ஆசிரியையிடம் 19 பவுன் நகை திருட்டு போனது.

மதுரை:

பேரையூர் குறிஞ்சி நகரை சேர்ந்த மனோகரன் மனைவி நாகரத்தினம் (வயது 52). இவர் பெரியபூலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார்.

நாகரத்தினம் கணவருடன் விருதுநகர் சென்று விட்டு அரசு பஸ்சில் கள்ளிக்குடி திரும்பி வந்தார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த 19 பவுன் தங்க நகையை யாரோ திருடிச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக கள்ளிக்குடி போலீசில் நாகரத்தினம் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT