செய்திகள்

ரஷ்யா: பேருந்து மீது ரெயில் மோதி பயங்கர விபத்து - 19 பேர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பேருந்து மீது ரெயில் மோதிய பயங்கர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாஸ்கோ:

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து110 கி.மீ. தொலைவில் உள்ள வலாடிமிர் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்து அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது பழுதானதானதாக கூறப்படுகிறது. அந்நேரம் மாஸ்கோவின் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து கிழக்கு மாஸ்கோவின் நிஞ்னி நவ்கோரோட்க்கு சென்று கொண்டிருந்த ரெயில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் பலர் கசகஸ்தான் மற்றும் உபெக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இது குறித்து ரஷ்யா அரசு விசாரணை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT