ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் 
செய்திகள்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்காவை தவிர 19 நாடுகள் உறுதி

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றன.

மாலை மலர்

குளோபல் வார்மிங் என்றழைக்கப்படும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவது என அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றனர்.