சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் 
செய்திகள்

சபரிமலைக்கு சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம்

இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு சபரிமலை சென்ற 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.