புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-
இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைவிட அதிகமாக உள்ளது. 8 மாநிலங்களில் 50 ஆயரத்தை விட அதிகமாக உள்ளது. 187 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதுவரை 17.72 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.