கொரோனா பரிசோதனை 
செய்திகள்

கொரோனா அச்சம்... தமிழகத்தில் 1.80 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக 1.80 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் பேசினார். தமிழகத்தில் 1.80 லட்சம் பேருக்கு கொரோனா குறித்த பரிசோனை நடந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான ஆய்வகங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT