கோப்புப்படம் 
செய்திகள்

நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 18 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி அருகேயுள்ள கிராமங்களில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். சுமார் நூறு பேர் படுகாயமடைந்தனர்.

மாலை மலர்

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள பாலே ஷுவா மற்றும் பாலே குரா ஆகிய கிராமங்களில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். 84 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.